districts

img

குடிநீர் நிறுத்தம்:  மக்கள் ஆவேசம்

கடலூர், மார்ச் 3- கோ.பொன்னேரியில் குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோ. மாவிடந்தல் ஊராட்சிமன்றம் கோ.பொன்னேரியில் நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன் தலை மையில் சாலை மறியல் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் பி.வீரமணி, வி.லட்சுமி, மாதர் சங்க வட்டச் செய லாளர் ச.ெஜயலட்சுமி, வாலிபர் சங்க வட்டக் குழு உறுப்பினர் பி.சதிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி னர். அப்போது குடி நீர் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். இதை யடுத்து அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் தண்ணீர் கசியும் பெரிய நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக சீரமைத்து தருகிறோம். மினி மோட்டார் அமைத்து தருகிறோம் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.